வட அமெரிக்க தமிழ் சங்க பேரவைக்கு ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தின் வாழ்த்துகளும் ஈழம் தமிழர் உரிமை நீதி பற்றிய தரவு பகிர்வும்
முதற்கண் இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை (FeTNA ) இயக்குனர்களுக்கு எமது வாழ்த்துகள்!
இம்முறை பேரவை விழாவில் ஈழ தமிழர்களின் உரிமை நீதி விடயங்களுக்காக FGTO மாநாடு மற்றும் பிராம்டன் தமிழின அழிப்பு நினைவாலய கண்காட்சிக்கு இடம் அளித்தமைக்காக ஒட்டாவா தமிழ் ஒன்றியம் சார்பில் நன்றிகள்.
கீழ்வரும் விடயங்களை பேரவையின் எதிர்கால நன்மை கருதி பகிர்ந்து கொள்கிறோம். சற்று நீண்ட மடல் என்றாலும் பேரவை இயக்குனர்களுக்கும் பேராளர்களுக்கும் ஈழ தமிழர் உரிமை நீதி சார்ந்த நிலைபாட்டை வெளிப்படையாக கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
ஒட்டாவா தமிழ் ஒன்றியம் (OTA) அதன் 2014 இல் ஆரம்பம் தொட்டு சிறிலங்காவின் தமிழின அழிப்புக்கு நீதி மற்றும் தமிழ் மரபு திங்கள் எனும் இரு முக்கிய இலக்குகளின் வழிகளில் செயல்பட்டு வருகின்றது. 2018 இல் பல கனேடிய தமிழ் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் நடைபெற்ற தமிழர் தாயகமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழின அழிப்பும் இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாடினை ஒழுங்கு செய்திருந்தோம். இதுபோல் தொடர்ச்சியாக வெளிப்படையான மாநாடுகள் மற்றும் இணைந்த கலந்துரையாடல்கள் ஊடாக ஈழ தமிழரின் உரிமை மற்றும் நீதிக்கான செயல்பாடுகளை முன்னெடுக்கின்றோம். அந்த வழியில் தான் உலகத் தமிழ் அமைப்புகளின் பேரவை (FGTO) இன் அண்மைய மாநாடும் அமைகிறது. 2009 ற்கு பின்னர் ஒரு நாடோ அல்லது பலமான தலைமையோ இல்லாத ஈழ தமிழர்களுக்கு வெளிப்படையான கூட்டாக இயங்கும் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் தேவையாக உள்ளன.
2009 இற்று முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைமையில் தமிழர்கள் பெரு நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களும் தமிழருக்கு எந்த விடயமாக இருந்தாலும் மிக வெளிப்படையாக கூறியிருந்தனர். 1987 இல் இந்தியா இலங்கை உடன்பாட்டின் பின் தலைவரின் சுதுமலை உரையாக இருக்கட்டும் 2002 இன் பின் பேச்சுவார்த்தை காலத்தில் வெளிப்படையாக மக்களிடம் சொல்லும் தன்மை இருந்தது. 2009 இல் தமிழ் புலிகள் மௌனித்த பின்னர் ஈழத்தில் மக்கள் திறந்த வெளி சிறைகளில் வதைபட்டு சிதைக்கப்பட்ட, புலம் பெயர் தமிழர்களிடம் குழப்பமான சூழலும் ஒரு நல்ல தலைமை தோன்றவும் வழியில்லாமல் இருந்தது. வெளிப்படையான கூட்டு தலைமை முறைதான் சிறந்ததாக இருந்தது.
ஒட்டாவாவில் 2009/10 இல் OTA உருவாக்க பட முன்னர் கனடிய தமிழர் பேரவையின் (Canadian Tamil Congress – CTC) கிளை இயங்கியது . தற்போது OTA இல் உறுப்பினர்களாக இருக்கும் சிலரும் அதில் பங்காற்றி இருந்தனர். பின்னர் 2010 இல் உலக தமிழர் பேரவை (GTF) யின் உருவாக்கத்திலும் பங்காற்றி இருந்தனர். உலக தமிழர் பேரவை 2010 உலகில் உள்ள 14 தமிழ் அமைப்புகளுடன் இரண்டு வருடங்கள் சிறப்பாக இயங்கியது. 2011/12 பகுதியில் தமிழர்களின் குரலாக ஒலிக்காமல் வெளி அரசுகளின் சொல் கேட்டு நடக்க தொடங்கியதால் அதன் ஒற்றுமை குலைந்தது. CTC இன் நிலைப்பாடும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் இன அழிப்புக்கு நீதி என்ற நிலைப்பாடுகளில் இருந்தது விலகி வெளி அரசுகளின் சிறிலங்காவின் ஆட்சி மாற்றம் மற்றும் வெளிப்படை தன்மையற்ற மூடிய அறைக்குள் பேச்சுக்கள் என சென்றமையால் ஒட்டாவாவில் CTC இன் கிளை மூடப்பட்டது.
பின்னர் CTC இனால் சிறிலங்காவின் திரு ரணில், திரு சுமந்திரன் மற்றும் மறைந்த திரு மங்கள சமரவீர ஆகியோருடன் பல சுற்று பேச்சுக்களில் ஈடுபட்டதை இப்போது அறிகிறோம். இது விடயங்களில் இன்று வரை எந்த விதமான வெளிப்படை தன்மையும் இல்லை. 2015 இல் ஆட்சி மாற்றத்தில் ரணில் அரசு வந்ததில் இருந்து CTC ரணில் மற்றும் மைத்திரி அரசின் ஒரு அங்கமாக செயல்பட விளைந்தனர். ஈழ தமிழர்களின் இன அழிப்புக்கான நீதி எனும் குரல்கள் இந்த மூடிய அறை பேச்சுக்கள் மூலம் வேகம் தணிக்க பட்டன. 2020 இல் GTF இல் கடைசியாக இருந்த USTAG (United States Tamil Action Group – அமெரிக்க தமிழ் செயல்குழு) வெளியேற CTC மட்டும் பொய்யாக தங்களை தமிழர் பிரதிநிதிகளாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நிலை நிறுத்த முயச்சித்தனர். கனடாவில் தமிழின அழிப்புக்கு அங்கீகாரம் பெறுவதில் CTC எந்த ஒத்துழைப்பும் செய்யவில்லை மாறாக ஒரு பெரும் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்தது.
மேல் கூறியவற்றை கூறியதற்காக காரணம் இனி வரும் காலத்தில் CTC (கனேடிய தமிழ் பேரவை) FeTNA வை தமிழர் உரிமைக்கு மற்றும் நீதி விடயங்களில் பயன்படுத்து முனையும். தயவு செய்து CTC ஐ இது விடயத்தில் நம்ப வேண்டாம். OTA கடந்த வருடம் கனேடிய அரசுக்கு அனுப்பிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளோம். தமிழ் அமைப்புகளுடன் கலந்துரைபடுவதை தவிர்த்து மூடிய குழுவாக ஒரு சிலருடன் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக தொடர்ந்தது செயல்படுவதால் அதனால் பல ஆபத்துகளும் இருப்பதால் OTA இந்த கடிதத்தை கனடிய அரசுக்கு நேரடியாக அனுப்பி இருந்தது. புலம் பெயர் தமிழர்கள் தமிழின அழிப்புக்கான நீதிக்காக உழைக்கவும் மற்றும் தமிழீழ தமிழர்களின் தீர்வாக சர்வசன வாக்கெடுப்பு (Referendum) மூலம் தீர்வு காணவேண்டும் என்று மட்டும் தான் இது வரை ஆணை கொடுத்துள்ளனர். வேறு வகை பேச்சுக்களில் ஈடுபட வேண்டுமானால் அது வெளிப்படையாக தமிழர்களின் ஆணை பெற்றே செய்யவேண்டும்.
FeTNA ஈழ தமிழர் உரிமை மற்றும் நீதி விடயங்களில் குரல் கொடுப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயங்களில் ஈடுபடும் போது பல தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி நிலைப்பாடுகளை அறிந்து செயல்படுவதே சிறந்தது. மாநாடு மற்றும் ஒருமித்த வேண்டுகோள்களை ( Common Principal) கொண்டு வருவது கடினம் ஆனால் அது ஒன்று தான் நாடற்ற தலைமையற்ற தமிழருக்கு இருக்கும் சிறந்த வழி. வட அமெரிக்காவில் இன்று ஈழ தமிழர் விடயத்தில் ஒரு பொது நிலைப்பாடு உள்ளது, அதன் அடிப்படையில் பயணிப்பது நல்லது. பின்வருவன அந்த பொதுநிலைப்பாடுகள் ஆகும். முறையான தமிழாக்கம் இன்னும் செய்யாமைக்கு மன்னிக்கவும்.
1) An internationally conducted and monitored Referendum that allows people living in the north-eastern region of the island of Sri Lanka (Northern and Eastern province) prior to 1948 and their descendants to find a democratic, peaceful, permanent, and political solution that meets Tamils’ aspirations.
2) An interim International Protection Mechanism in the north-eastern region of the island.
3) The Repeal of the Sixth Amendment to the Sri Lankan Constitution
4) The referral of the situation in Sri Lanka to the International Criminal Court with respect to genocide, crimes against humanity and war crimes, and legal action against Sri Lanka before the International Court of Justice under the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide and the Convention against Torture.
அண்மையில் FGTO இனால் தமிழ் நாடு முதல்வருக்கு அனுப்பிய கடித்தத்தையும் இத்துடன் இணைத்துள்ளோம். கடந்த FetNA பொதுக்குழு கூட்டத்தில் எமது பேராளர்களால் தமிழின அழிப்பு முன்தடுப்பு மற்றும் அங்கீகாரம் எனும் பொருள்பட ஒரு குழுவை நீண்ட கால நோக்கில் உருவாக்கம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அப்படி ஒரு குழு FeTNA வில் அமைக்க பட்டால், அதன் மூலமாகவும் ஈழ தமிழர் உரிமை மற்றும் நீதிக்கான விடயங்களில் அடுத்த சில வருடங்களுக்கு இலகுவில் முடிவுகளை எடுக்க செல்லப்பட கூடியதாக இருக்கும்.
தமிழ் மரபு, இலக்கியம், கலை மற்றும் தமிழ் சார் விடயங்களில் FeTNAவின் பணிகள் மிக பாராட்டுக்கு உரியவை. அதில் உறுப்பினராக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
மீண்டும் எமது மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொண்டு
ஒட்டாவா தமிழ் ஒன்றியம் இயக்குனர் குழு சார்பாக