Tamil Heritage Month Gala | தமிழ் மரபுத் திங்கள் விழா – 2026
-
Welcome
-
Promotion
-
Sponsors
-
Recap
-
Gallery
-
Videos
Tickets: Limited availability!
- Adults: $75
- Students: $45
- Family: $200 for members and supporters (Please reach out OTA board for details)
To purchase tickets or get more details, please contact OTA at info@ottawatamilassociation.ca or visit https://ottawatamilassociation.ca/thm.
Reception: 3:00 PM – 5:30 PM
Dinner: 5:30 PM – 8:00 PM Venue:
750 Ridgewood Avenue
Ottawa, ON
Canada
Last year Recap is below..
Ottawa Tamil Association, 9th Tamil Heritage Month Gala 2025
Thank You, Canada – Continuous recognition of Tamil genocide Remembrance Day and steps toward justice – was the key message and theme at the Tamil Heritage Month gala 2025 in Ottawa. The celebrations occurred at the St Elias Centre in Ottawa on Sunday, January 26, 2025. The evening was well attended by around 300 guests, including several federal, provincial, and city representatives, paramedics and law enforcement members, to commemorate the ancient Tamil heritage values, art, and culture and encouragement of Tamil Canadian’s contribution to Canada. The opening ceremony included the First Nations blessings, the Canadian national anthem, Tamil Mozhi Valthu, and a moment of silence.
Event Video: https://www.youtube.com/playlist?list=PLry3jehvRzVS8Et41CrZm4xPYbI2ehaJ_
தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் தமிழின அழிப்பை சட்டபூர்வமாக நிறுவுவதற்கான மாதிரியை விளக்கும் ஆவணத்துடன் கூடிய குறு நூல் ஒன்று தை 2025 இல் வெளியிடப்பட்டது. ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தின் தமிழ் மரபுத்திங்கள் விழாவில் இந்த குறுநூல் அறிமுகப்படுத்தப்பட்டது. வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் பல கனேடிய அமெரிக்க தமிழ் அமைப்புகளும் இணைந்து தமிழின அழிப்புக்கு சர்வதேச சட்ட ரீதியான நீதி எனும் ஆய்வில் 2023 தொடக்கம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சங்க கால மரபுகளுடன் கூடிய மரபை தமிழீழ அரசு 1990 முதல் 2009 வரை கொண்டிருந்ததது. இந்த நடைமுறை அரசு 2009 இல் அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் தொடர்ந்து நீதிக்காக குரலெழுப்பினர். எந்த அரசும் தமிழர்சார்பில் இல்லாமையால் தமிழின அழிப்புக்கான நீதியை புறம்தள்ளி தமிழீழ வரலாற்றை தடைகளின் ஊடே அழிப்பதற்கான முயற்சிகளும் தொடர்ந்தது. ஆனாலும், புலம் பெயர் தமிழர்களின் பெருமுயற்சியால் கனடாவில் தமிழின அழிப்பு கல்வி வாரம் 2021 இல் ஒரு சட்டமாகவும் தமிழின அழிப்பு நினைவு நாள் (May 18) கனடா பிரதமரால் 2023 இல் பிரகடனபடுத்தப்பட்டதும் நீதிக்கான நம்பிக்கை ஒளிக்கீற்றாகவும் இருக்கிறது.
இந்த குறுநூல் (https://tamilconferences.org/booklet) 1948 முதல் தமிழின அழிப்பை கேள்விக்குள்ளாக்காத ஐநாவின் தவறுகள் மற்றும் 2002 இல் உருவாகிய சமாதான முயற்சிகளை பின் தள்ளி 2006 இல் தமிழர் தரப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதில் தொடங்கிய முன்தயாரிப்பு, இன அழிப்பு மற்றும் தொடரும் மறுப்பு போன்ற படிநிலைகளை விவரிக்கிறது. இந்த சட்ட ஆய்வானது சாட்சிகளின் பேட்டிகள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஜனாவுக்கு வெளியே மேற்கொண்ட ஆய்வுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த ஆய்வுகள் ஐ.நா., மனித உரிமைக் குழுக்கள் மற்றும் iNGOக்கள் விட்டுச் சென்ற குறைபாடுகளை நிரப்புவதற்கும், கனடாவில் எற்கனவே இருக்கும் சிறிலங்காவின் தமிழின அழிப்பு எனும் அங்கீகாரத்தை தொடர்ந்து உறுதிப்படுத்தவும் உதவும். இக் குறுநூல் அமெரிக்க பாராளுமன்றத்தின் 2024 இல் முன்மொழியப்பட்ட தீர்மானம், தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரித்து, தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை ஆதரிக்கிறது என்பதையும் விவரிக்கிறது. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சட்ட ஆய்வுகளின் ஒரு பகுதியே இவையாகும். சோழர்களின் அரசுக்கு பின்னர் தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடும் அரசும் தமிழீழத்தில் தான் இருந்தது, அரசற்ற நிலையில் உள்ள தமிழர்களின் மறைக்கப்படும் உண்மைகளை இனம் கண்டு நீதிக்காண வழிகளை காண்பதுதான், எதிர் காலத்தில் உலகில் பரந்திருக்கும் தமிழர்கள் தமிழீழ வரலாறுகளை தற்போதுள்ள தடைகள் இன்றி சுதந்திரமாக பேணவும் இத்தகைய சட்ட ஆய்வுகள் வேண்டியதாக உள்ளது.
ஒட்டாவா தமிழ் ஒன்றியம்
https://ottawatamilassociation.ca/
Last year Gallery is below..
Last year videos are below..