Tamil Heritage Month Gala | தமிழ் மரபுத் திங்கள் விழா 2021

 

 

The Ottawa Tamil Association hosted a virtual event from Ottawa to
celebrate the Tamil Heritage Month on Sunday, January 31, 2021. The
event was viewed by over 3,500 people on various platforms (YouTube,
Livestream and Facebook). The event was attended by many, including
several federal, provincial and city representatives to commemorate
the ancient Tamil heritage, art and culture. The opening ceremony
included First Nations blessings by Dr.Karen Lawford, Canadian
national anthem, Tamil mozhi Valthu and a moment of silence.

The keynote speaker for the evening was Dr.Kumaravadivel Guruparan, a
former senior lecturer at the University of Jaffna and current
Research Visitor at the University of Oxford. He is also a practising
attorney that has been a part of many lead counsels in cases regarding
human right crimes and humanitarian law issues in Sri-Lanka.
Dr.Guruparan is a vital member of our community and has been greatly
immersed in fighting for accountability, justice and for the
betterment of Tamil people in Sri-Lanka. He spoke on the importance of
resilience and continued fight for justice, specifically focusing on
the current government of Sri-Lanka and their acts that negatively
harm the Tamil population.

Prime Minister Hon. Justin Trudeau delivered a message for Tamil
Heritage Month. He also acknowledged the importance of this month for
Tamils, while shining light on the recent Mullivaikal destruction in
Sri-Lanka.

Premier Doug Ford gave his wishes for Thai Pongal and for Tamil
Heritage Month.

Ottawa Mayor Hon. Jim Watson, delivered a message wishing Ottawa
Tamils a great Tamil Heritage Month and was proud to be a part of our
celebration.

Dr.Krishnagobi, a family physician in Ottawa talked about the
unprecedented global pandemic we are all experiencing currently and
was glad to be a part of the celebrations.

MP Hon. Jagmeet Singh, the leader of the New Democratic Party noted
the importance of the celebration of Tamil Heritage Month due to
recent events regarding Mullivaikal, while showing his support for the
Tamil cause.

MP for Ottawa West-Nepean Hon. Anita Vandenbeld delivered her
well-wishes for the Thai Pongal and Tamil Heritage Month and
highlighted the various cultural aspects and traditions that take
place.

MPP for Scarborough Rouge-Park Hon. Vijay Thanigasalam delivered a
heartfelt message regarding unity amongst the diaspora and the
prosperity of the Tamil people. He also delivered a message alongside
MPP Minister of Heritage, Sport, Tourism and Culture Industries Hon.
Lisa Anne MacLeod in which they wished all a Happy Thai Pongal and for
safe celebrations.

MP for Nepean Hon. Chandra Arya thanked the Ottawa Tamil Association
for the hosting of the Gala and recognized the importance of
celebrating Tamil Heritage Month.

MP for Scarborough Rouge Park Hon. Gary Anandasangaree, who played a
vital role in the motion to make January Tamil Heritage Month,
delivered a message regarding the value of frontline workers during
the global pandemic and spoke on the continued Canadian government
support towards advocacy for justice for Tamils.

MPP for Ottawa South Hon. John Fraser delivered wishes for Tamil
Heritage Month and recognized the diversity within our
communities.

Brampton Mayor Hon. Patrick Brown, acknowledged the recent events
regarding the Mullivaikal Memorial and outlined the steps that the
Brampton City Council would be taking in order to ensure that Tamil
people can commemorate and remember our people. This will be done with
the building of our own memorial in Brampton.

MPP for Markham-Thornhill Hon. Logan Kanapathi delivered well wishes
for Thai Pongal and for Tamil Heritage Month while urging people to
stay safe during this global pandemic.

Former MPP for Carleton-Mississippi Mills, Hon. Jack MacLaren in his
speech mentioned his motion to call the federal government to remove
the ban on Tamil Tigers at Ontario Parliament. As the ban is a dark
cloud on Tamil people, his motion requested the Ontario provincial
parliament to request the federal government.

Ontario provincial Minister Todd Smith delivered a speech mentioning
that it took five attempts to put forward the Tamil Heritage Month
bill at Ontario legislature. A persistent effort like playing football
to make the goal was kind of an experience he felt. When the bill was
passed, Canadian Tamil community was at the legislature to overlook
the debat gave additional strength for the bill.

MP for Sherwood Park – Fort Saskatchewan Hon. Garnett Genuis mentioned
that he put forward the last year motion to asking UN to investigate
the genocide against Tamils in Sri Lanka through the foreign affairs
standing committee. He also mentioned that Canada not just needs to
wait for the UN to act, rather it should create its own mechanism to
investigate.

Tamil Canadians are one of the most diligent growing communities
proudly representing the diverse multicultural concept of Canadian
society. Tamil heritage month is an opportunity to acknowledge the
contributions of Tamil Canadians to the Canadian society and the Tamil
culture.

Classical dances, Tamil vocal and musical performances, ancient Tamil
martial arts practice, exhibits of Tamil culture and insightful
speeches by the youth kept the guests entertained. Performances were
contributed by Canadian tamil youths from Toronto, Montreal and Ottawa
communities. The evening also marked an end to the month-long Tamil
Heritage Month festivities by Tamil Canadians from coast to
coast.

The Tamil Heritage Month Act – Bill 156 was passed in the province of
Ontario on March 25, 2014. In October 2016, the House of Commons voted
unanimously on a motion to recognize January as Tamil Heritage Month.

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டத்தை இவ்வருடமும்
ஒட்டாவாவில்  ஒரு மெய்நிகர் நிகழ்வாக 2021 ஜனவரி 31,
ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இந்த நிகழ்வை 3,500 க்கும் மேற்பட்டோர்
பல்வேறு தளங்களில் (YouTube, Livestream and Facebook) பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பண்டைய தமிழ் பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரத்தை
நினைவுகூரும் வகையில் பல நிகழ்ச்சிகளும் கூட்டாட்சி, மாகாண மற்றும் நகர
பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் கனடிய தேசிய
கீதம், தமிழ் மொழி வாழ்த்து,  கனடிய பழங்குடியினரின் ஆசீர்வாதம்
மற்றும் ஒரு கணம் அகவணக்கம் ஆகியவை அடங்கும்.

நிகழ்வின் பிரதம பேச்சாளராக சிறப்புரையாற்றியவர் யாழ்ப்பாண
பல்கலைக்கழகத்தின் முன்னாள் மூத்த விரிவுரையாளரும் ஆக்ஸ்போர்டு
பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஆராய்ச்சியாளருமான டாக்டர் குமாரவடிவேல்
குருபரன். அவர் இலங்கையில் மனித உரிமைக் குற்றங்கள் மற்றும் மனிதாபிமான
சட்டப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளில் வாதாடிய முன்னணி
வழக்கறிஞராகவும் உள்ளார். பொறுப்புக்கூறல், நீதி மற்றும் இலங்கையில் உள்ள
தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக போராடுவதில்
பங்களித்துவருகிறார்  Dr. குருபரன். இலங்கைத் தமிழர்களின் நீதிக்கான
தொடர்ச்சியான போராட்டம் குறித்து அவர் பேசினார், குறிப்பாக இலங்கையின்
தற்போதைய அரசாங்கம் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிர்மறையாக தீங்கு
விளைவிக்கும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தினார்.

பிரதமர் கௌரவ ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் மரபுத்திங்கள் செய்தியை வழங்கினார்.
இலங்கையில் அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிப்பினை
சுட்டிக்காட்டி  தமிழ் மரபுத் திங்களின் தேவையை கூறிச்சென்றார்
.

MPP கௌரவ Ontario Premier Doug Ford  தை பொங்கல்  மற்றும்
தமிழ் மரபுத் திங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஒட்டாவா மேயர் கௌரவ  Jim Watson, ஒட்டாவா தமிழர்களுக்கு  தமிழ்
மரபுத் திங்கள் வாழ்த்து செய்தியை வழங்கினார், மேலும் எங்கள்
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம்  அடைவதாக
குறிப்பிட்டார்.

ஒட்டாவாவில் உள்ள குடும்ப மருத்துவர் டாக்டர் கிருஷ்ணகோபி ஜெயாகரன், நாம்
அனைவரும் தற்போது அனுபவித்து வரும் கொரோனா   நோய் தொற்றில் இருந்து
பாதுகாப்பாக இருக்க வேண்டிய தேவையை கூறிச்சென்றார்.

எம்.பி., கௌரவ  புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் Jagmeet Singh,
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பான
தமிழர்களின் உணர்வுகளை சுட்டிக்காட்டி தமிழ் மரபுத் திங்களின்
முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார், அதே நேரத்தில் தமிழ்
மக்களிற்கான தனது ஆதரவையும் தெரிவித்தார்.

ஒட்டாவா மேற்கு- நேப்பியன்  எம்.பி. அனிதா வாண்டன்பெல்ட்  தை
பொங்கல்  மற்றும் தமிழ் மரபுத் திங்கள் வாழ்த்துக்களைத்
தெரிவித்ததோடு, நடைபெறும் பல்வேறு கலாச்சார அம்சங்களையும் மரபுகளையும்
எடுத்துரைத்தார்.

ஸ்கார்பாரோ ரூஜ்-பார்க்  MPP. கௌரவ விஜய் தணிகாசலம்,
புலம்பெயர்ந்தோர் மத்தியில் ஒற்றுமை மற்றும் தமிழ் மக்களின் செழிப்பு
குறித்து இதயப்பூர்வமான செய்தியை வழங்கினார். எம்.பி.பி உடன் ஒண்டாரியோ
பாரம்பரிய, விளையாட்டு, சுற்றுலா மற்றும் கலாச்சார கைத்தொழில் அமைச்சர்
Lisa Anne Macleod அவர்கள் அனைவருக்கும் இனிய தை பொங்கல்  மற்றும்
தமிழ் மரபுத் திங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்  .

ஒட்டாவா-நேப்பியன் எம்.பி. Chandra Arya  இவ்நிகழ்வை நடத்திய
ஒட்டாவா தமிழ்  ஒன்றியத்திற்கு  நன்றி தெரிவித்ததோடு,
தமிழ் மரபுத் திங்கள் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தையும்
எடுத்துக்கூறினார்.

ஸ்கார்பாரோ ரூஜ் -பார்க் விற்கான எம்.பி.,  தை மாதத்தை தமிழ் மரபுத்
திங்கள் ஆக பிரகடனப்படுத்துவதில்  முக்கிய பங்கு வகித்த  கௌரவ
Gary Anandasangaree , உலகளாவிய தொற்றுநோய்  காலத்தில் முன்னணி
தொழிலாளர்களின் மதிப்பு குறித்து ஒரு செய்தியை வழங்கினார், மேலும்
தமிழர்களுக்கான நீதிக்கான கனேடிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவைப்
பற்றி பேசினார்.

ஒட்டாவா தெற்கு MPP John Fraser தமிழ் மரபுத் திங்கள் வாழ்த்துக்களை
வழங்கினார் மற்றும் எங்கள் சமூகங்களில் உள்ள பன்முகத்தன்மையை
எடுத்துக்கூறினார் .

Brampton  மேயர் Hon. Patrick Brown, முள்ளிவாய்க்கால் நினைவு தூபி
தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை கூறி, தமிழ் மக்கள் போரில் உயிரிழந்த
மக்களை நினைவுகூரவும் நினைவில் வைத்துக் கொள்ளவும் உறுதி செய்வதற்காக
பிராம்டன் நகர சபை எடுக்கும் நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டினார்.

மார்க்கம்-தோர்ன்ஹில்  MPP கௌரவ.  லோகன் கனபதி,  தை
பொங்கல்  மற்றும் தமிழ் மரபுத் திங்கள் நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்ததோடு, இந்த உலகளாவிய தொற்றுநோய்களின் போது மக்கள் பாதுகாப்பாக
இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஒன்ராறியோவின் முன்னாள் MPP Jack Maclaren தனது உரையில் ஒன்ராறியோ
நாடாளுமன்றத்தில் புலிகள் மீதான தடையை நீக்க மத்திய அரசை கேட்டுக்கொண்ட
தனது தீர்மானத்தை குறிப்பிட்டுள்ளார். இந்தத் தடை தமிழ் மக்கள் மீது
இருண்ட மேகம் என்பதால், அவரது தீர்மான வாசகம் ஒன்ராறியோ மாகாண
நாடாளுமன்றத்தை மத்திய அரசிடம் கோருமாறு கோரியது.

ஒன்ராறியோ மாகாண அமைச்சர் Hon. Todd Smith  தனது உரையை நிகழ்த்தி
ஒன்ராறியோ சட்டப்பேரவையில் தமிழ் மரபுத் திங்கள் மசோதாவை முன்வைக்க ஐந்து
தடவை முயற்சிகள் எடுத்ததாகக் குறிப்பிட்டார்.  இந்த மசோதா
நிறைவேற்றப்பட்டபோது, விவாதத்தை கவனிக்க கனேடிய தமிழ் சமூகம்
சட்டமன்றத்தில் இருந்தது மசோதாவுக்கு கூடுதல் பலத்தை அளித்தது என்று
கூறினார் .

MP for Sherwood Park-Fort Saskatchewan Hon.  Garnett
Genuis,  இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து
வெளிநாட்டு விவகார நிலைக்குழு மூலம் விசாரிக்குமாறு ஐ.நாவிடம் கேட்டுக்
கொள்வதற்கான கடந்த ஆண்டு பிரேரணையை முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கனடா, ஐ.நா. செயல்படுவதற்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, மாறாக
அது விசாரிக்க அதன் சொந்த பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

கனடிய சமுதாயத்தின் மாறுபட்ட பன்முக கலாச்சார கருத்தை பெருமையுடன்
பிரதிநிதித்துவப்படுத்தும் மிகவும் விடாமுயற்சியுடன் வளர்ந்து வரும்
சமூகங்களில் தமிழ் கனேடியர்களும் ஒன்றாகும். தமிழ் மரபுத் திங்கள் என்பது
கனேடிய சமுதாயத்திற்கு  தமிழ் கனடியர்களின் பங்களிப்பை எடுத்துக்
கூறுவதற்கான  ஒரு வாய்ப்பாகும்.

பரத நாட்டியம் , நடனங்கள், மற்றும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்
கலாச்சாரத்தின் கண்காட்சிகள் விருந்தினர்களை மகிழ்வித்தன. டொராண்டோ,
மாண்ட்ரீயல் மற்றும் ஒட்டாவா சமூகங்களைச் சேர்ந்த கனடிய தமிழ்
இளைஞர்களால் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன.

தமிழ் மரபுத் திங்கள்  – மசோதா 156, ஒன்ராறியோ மாகாணத்தில் மார்ச்
25, 2014 அன்று நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 2016 இல், ஜனவரி மாதத்தை
தமிழ் பாரம்பரிய மாதமாக (தமிழ் மரபுத் திங்கள்) அங்கீகரிக்கும்
பிரேரணையில் கனடிய பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்தது.

$(document).ready(function () {
$(“.switch-language”).on(“click”, function () {
var switchTo = $(this).attr(“id”);
$(“.language”).removeClass(“active”);
$(“.language#” + switchTo).addClass(“active”);
});
});