About Us

Objectives of the Ottawa Tamil Association

To contribute to the Canadian Value, the association shall:

  • Engage in community promotions, meetings, events, and fundraising for the betterment of the community.
  • Advocate for justice, human rights, and peace.
  • Engage with other organizations to promote human rights and justice for Tamils worldwide.
  • Engage and encourage Ottawa Tamil community involvement in all (three) levels of government.
  • Foster and promote harmony and a better understanding and appreciation of the democratic process in governance and setting of Canadian life

Background

Since 2011, the Group of Ottawa Tamils has been actively supporting human rights and justice for Eelam Tamils efforts such as No Fire Zone documentary projects, sponsoring human rights conferences and coordinating events and meetings with other human rights groups, politicians, and Tamil organizations.

In 2014, it was felt that there was a lack of Tamil organization focus in Ottawa to promote justice and human rights, especially when there was a need to raise awareness for an international independent investigation of Sri Lanka’s war crimes and crimes against humanity. To fill the vacuum and necessity to organize and coordinate events, meet politicians, etc., the group of volunteers formed the Ottawa Tamil Association as a member-driven organization. To expand its activities and facilitate future projects, OTA was registered as a non-profit organization in 2015.

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் (OTA – https://ottawatamilassociation.ca/) அதன் 2014 இல் ஆரம்பம் தொட்டு சிறிலங்காவின் தமிழின அழிப்புக்கு நீதி  மற்றும் தமிழ் மரபு திங்கள்  எனும் இரு முக்கிய இலக்குகளின் வழிகளில் செயல்பட்டு வருகின்றது. 2012 இற்று பின்னர் ஒட்டாவாவில் தோன்றிய நீதிக்கான முயட்சிகளின் வெற்றிடத்தை நிரப்பவும் கனடிய அரசியல் மற்றும் அரசுகளை  தமிழ் குமுகத்திடம் நெருக்கமாக கொண்டு வந்து கனடிய தமிழர்களின் நீதிக்கான நீண்ட  பயணத்தை Toronto, Montreal, மற்றும் அமெரிக்க செயல்பாட்டாளர்களுடன் இணைந்து வலுப்படுத்துவதே நோக்கமாக இயங்குகிறது.  2016 இல் ஈழத்தில் வடமாகான சபையின் தமிழின அழிப்பு தீர்மானத்தை அடிப்படையாக வைத்து சிறிலங்காவின் தமிழின அழிப்பு எனும் புத்தகத்தை பிரம்ரன் தமிழ் ஒன்றியத்துடன் உருவாக்கி ஆயிரக்கணக்கான பிரதிகளை கனடிய பிரமுகர்களுக்கு வழங்கியது. வடமாகாண முதல்வரின் ஒருவார கனடிய பயணத்தின் ஒருங்கிணைப்பு குழுவில் ஒரு உறுப்பினராக ஒன்றியம் செயலாற்றியது.

2018 இல் பல கனேடிய தமிழ் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் நடைபெற்ற தமிழர் தாயகமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழின அழிப்பும் இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாடினை கூட்டாக  ஒட்டாவா தமிழ் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்தது.  இதுபோல் தொடர்ச்சியாக வெளிப்படையான  மாநாடுகள் மற்றும் இணைந்த கலந்துரையாடல்கள் ஊடாக ஈழ தமிழரின் உரிமை மற்றும் நீதிக்கான செயல்பாடுகளை முன்னெடுக்கின்ன்றது. அந்த வழியில் தான் உலகத் தமிழ் அமைப்புகளின் பேரவை (FGTO) இன் அண்மைய New York மாநாடும் (https://fgto.org/global-tamil-summit/summit-2022)  அமைகிறது. 2009 ற்கு பின்னர் ஒரு நாடோ அல்லது பலமான தலைமையோ  இல்லாத ஈழ தமிழர்களுக்கு வெளிப்படையான கூட்டாக இயங்கும் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் தேவையாக உள்ளன. May 18 ஐ பல ஒட்டாவா மற்றும் வட அமெரிக்க தமிழ் அமைப்புகளுடன் இணைந்து  தமிழின அழிப்பு நினைவு நாள் (https://www.einpresswire.com/article/627101487/tamil-genocide-remembrance-day-may-18-2023-commemoration-in-ottawa)  என்று வருடம் தோறும் நீதிக்கான தேவையை வெளிப்படுத்தியும் வருகிறது. கடந்த வருடம் கனடிய அரசும் இதனை முதன் முறையாக அறிவித்திருந்தது அத்துடன் ஒன்றாரியோ அரசும் தமிழின அழிப்பு நினைவு வாரத்தை தமிழ் மரபுத்திங்கள் போன்று சட்டமாக்கியதும் குறிப்பிட தக்கது. இந்த நீதிக்கான செயல்பாடுகள் தமிழீழத்தில் தமிழரின் இருப்பையும் பாதுகாப்பையும் பேண உதவுவதுடன் கனடிய தமிழரின் எதிர்கால சந்ததிக்கு கடின உழைப்பும் தளரா உறுதியும் தமிழர் வரலாறு மற்றும் விழுமியம் மீது அதிக ஈர்ப்பு இருக்க வழிகோலும்.

ஒட்டவா தமிழ் ஒன்றியம் தமிழ் மரபுத்திங்கள் விழாவை (https://www.kget.com/business/press-releases/ein-presswire/605476690/ottawa-tamil-association-hosts-the-seventh-tamil-heritage-month-gala-on-january-29-2023/)  வருடம் தோறும் கடைசி ஞாயிறு அன்று கனடிய தலைநகரில் அரசியல் மற்றும் வேற்றின மக்களும் இலகுவில் கலந்து கொள்ள கூடிய வகையில், கனடிய தமிழர்களின் மேன்மைகளை கனடிய பரந்த சமூகத்திடம்  கொண்டு செல்லும் வகையில் நீதி சார்ந்த மற்றும் தன்னார்வ செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து செய்கிறது. ஐம்பதற்கு மேற்பட்ட  தமிழ் அமைப்புகளின்  வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையில் உறுப்பினராகவும் உள்ளது. தமிழின அழிப்புக்கான நீதி மற்றும் தமிழ் மரபுத்திங்கள்  என்பனவே ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தின் முதன்மை நோக்காக FeTNA குழுமத்தில் உள்ளது. நீதிக்கான செயல்பாடுகளுடன் வருடம் தோறும் ஈழ தமிழருக்கான மனிதாபிமான உதவிகள், கனடிய உணவு வங்கிக்கு தியாகி திலீபன் நினைவாக உலர் உணவு வழங்கல், ஒட்டாவா தமிழர்களின் தேர் திருவிழாவில் தண்ணீர்பந்தல், கனேடிய இருதய நிறுவனத்திற்கு நிதிசேர்க்கை, தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் செயலரங்கு என பல விடயங்களையும் முன்னெடுக்கிறது. இவைஎல்லாவற்றிக்கும், ஒட்டாவா தமிழர்களின் கடந்த ஒன்பது வருட தொடர்ச்சியான ஆதரவு அடிப்படையாகிறது. அத்துடன் Montreal, Cornwal, Toronto, Brampton போன்ற கனடிய நகரங்களில் இருந்தும் அமெரிக்காவின் New Jersey, Raleigh போன்ற நகரங்களில் இருந்து வரும் தமிழர்களின் ஆதரவிற்கும் நன்றியுடன் செயல்பாடுகளை தொடர்கிறது. 

https://ottawatamilassociation.ca/thm

Copyright© 2022 Ottawa Tamil Association. All rights reserved.