November 30, 2023 —
தமிழீத்தில் தமிழின அழிப்பு – சர்வதேச சட்ட ரீதியான ஆய்வு (Tamil Genocide in Tamil Eelam – Legal perspective)
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. – 323
பின்சாரப் பொய்யாமை நன்று. – 323
தேதி & நேரம்: அமெரிக்க கிழக்கு நேரம்: டிசம்பர் 2, சனிக்கிழமை, காலை 11 மணி
சூம் நேரலை – Zoom Live : fetna.org/zoom or / https://ottawatamilassociation.ca/zoom
வலையொளியில் பார்க்க : YouTube – https://youtube.com/live/DCQx42uCH5I
முகப்புத்தகத்தில் பார்க்க: https://www.facebook.com/events/267448246300734
1. தமிழர் பண்பாட்டு இன அழிப்பு – ஒரு வரலாற்றுப்பார்வை (Background)
சிறிலங்காவின் தமிழருக்கெதிரான பண்பாட்டு இனஅழிப்பு கடந்த ஏழு தசாப்தத்திற்கு மேலாக நடந்து வருகிறது. அதில் தமிழீழ மக்களின் தொன்மையான ஓலை சுவடிகள் பாதுகாக்கப்பட்ட யாழ் ப்பாண நூலகம் சிறிலங்கா அரசினால் அழிக்கப்பட்டது. மேலும், தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து தமிழர் குடி பரம்பலை குறைத்தல் என தமிழின அழிப்பு தொடர்கிறது. இந்த பண்பாட்டு இனஅழிப்பை பற்றிய ஆய்வு.
திருமதி மீனா இளஞ்செயன் – தமிழ் ஆசிரியை, கேரொலைனா தமிழ்ச் சங்க பொருளாளர், ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு (Tamil Americans United PAC – tamilpac.org) தலைவர், தகவல் தொழில்நுட்ப பொறியாளர்
2. சிறிலங்காவின் தமிழின அழிப்பு – நோக்கம் – முள்ளிவாய்க்கால் ஒரு கொலைக்களம்
2009 இல் சிறிலங்கா அரசானது தமிழீழ தேச பொதுமக்களை பெருமளவில் அழிக்கும் நோக்கில் செயல்பட்டது. இனஅழிப்பு நோக்கத்தை சட்ட நீதியாக நிறுவுவதற்கு சட்ட வழிமுறை ஒன்று அவசியம். சிறிலங்கா அரசால் அறிவிக்கபட்ட பாதுகாப்பு வலையம் கிட்லர் காலத்தில் யூதரை அழிக்க பயன்பட்ட ஒரு விச வாயு அறை என்ற ரீதியில் சட்ட வழிமுறை பற்றிய கருத்தாய்வு.
திரு. ராசீவ் சிறீதரன், அறிவுசார் சொத்து (Interlactual) வழக்கறிஞர், பொறியாளர், இனஅழிப்புக்கு எதிரான தன்னார்வ சட்ட முன்னெடுப்பாளர். ThirdEyes எனு ம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர்.
###