வரவேற்பு நிகழ்வுகளை தொடர்ந்து சமூக பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மங்கள விளக்கு ஏற்றினர். நீதி மற்றும் மரபுக்கான உறுதியை குறிக்கும் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் ஏனைய கலை நிகழ்ச்சிகளும் மாலை விருந்தை சிறப்பித்தன. ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தின் பத்து ஆண்டுகால செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளின் மீள் பார்வையாகவும் அடுத்த ஐந்து வருட செயல்பாடுகள் பற்றியும் செயல்குழுவின் சார்பில் சிற்றுரை இருந்தது. நிகழ்வில் முனைவர் நாதன் யோகநாதன் அவர்களுக்கு King Charles III Coronation விருது அவரின் பல்லாண்டு உயிரியல் மருத்துவ ஆய்வுக்கு வழங்கப்பட்டது. முப்பது வருட கனடிய ஆயுதப்படை சேவை மற்றும் இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாக இருப்பதை பாராட்டி திருமிகு வாகீசன் மதியாபரணம் அவர்களையும் . ஒட்டாவா காவல்துறையில் பதினைந்து வருட சேவையில் அதிகாரியாக இருக்கும் மற்றும் மனித உரிமை விருதையும் பற்ற திருமிகு டேவ் சகரியஸ் அவர்களும் ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.
குடும்பத்துடன் சுவையான விருந்துண்டு, அருமையான கலை நிகழ்ச்சிகளை ரசித்து, நண்பர்களுடன் இனிய உரையாடல்களில் ஈடுபட்ட பின்னர், மன நிறைவுடன் இரவு 9 மணியளவில் நிகழ்வு முடிவடைந்து அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

இந்த 10வது ஆண்டு விழா ஒட்டாவா தமிழ் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நீண்ட கால அர்ப்பணிப்பையும், சமூக ஒற்றுமையையும், தமிழ் மரபு மீதான பெருமிதத்தையும் மீண்டும் உறுதிப்படுத்திய ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
10th Anniversary Sponsors
Ushan Group, Sri Bakavatsingam – Realtor, Jana Sivarajah – Realtor, Talenta Academy, Kakapo Technologies Inc, SkyVision Group, Creig Henry Dental, Piriya Homes – Realtor, Kapilan Ramachandran – Realtor, OTACT Tae E. Lee Taekwondo, Gravity Duct Cleaning Service, Akshara Decor, AK Beauty Makeup, RKV Accounting, A1 DUCT Cleaning Service, Sakthi Silk, Sparkler Stones, Spice World Supermarket, Divine Eye Photography, Expo Visuals, Sixty Wings – Kanata, Ahan Media, Phantom Visualz, Enchanted Booth, Vetty Home Renos, Sathi Nannithamby – Mortgage Agent, Kokulathas Chandrasegeram – Realtor, Fides Mortgages, Oritha, Jasmine Florist, Prax Homes, Ayine Restaurant, Ajax Crematorium and Brampton Crematorium & Visitation Centre, SAYTAC, Unique Design Work.
###
