November 13, 2025 —
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பாக “மாவீரர் நாள் நினைவேந்தல்,” வரும் மாவீரர் நாளான நவம்பர் 27-ஆம் நாள், அமெரிக்க கிழக்கு சீர்தர நேரம் இரவு 9 மணிக்கு இணையம் வழியாக நடைபெற உள்ளது. நம் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக வீரச்சாவு அடைந்த மாவீரர்களுக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படும். இந்த நிகழ்வில் சிறப்புரையாற்ற ஈழத்தில் இருந்து வழக்கறிஞர் திரு நடராசர் காண்டீபன் அவர்களும்,கனடாவில் இருந்து தமிழாசிரியர் திருமிகு கோதை அமுதன் அவர்களும் இணைகிறார்கள். இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
நாள்: நவம்பர் 27, வியாழக்கிழமை
அமெரிக்க கிழக்கு நேரம்: இரவு 9 மணி
இந்திய/இலங்கை நாள் & நேரம்:
நவம்பர் 28, வெள்ளிக்கிழமை காலை 7:30 மணி
இணைய உரலிகள்:
YT Live: http://fetna.org/ytlive
FB Live: http://fetna.org/fblive

###
