The indigenous leaders hope Minister Gary will strengthen the relationship. We are confident that Gary will bring a wealth of knowledge, experience, and passion to his new portfolio. We wish him all the very best.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையை நேற்று (July 26, 2023) அறிவித்தார். அமைச்சரவையில் குடியரசு – பூர்வீக குடிகள் உடனான உறவுகள் அமைச்சராக கௌரவ கரி ஆனந்தசங்கரி அவர்கள் பதவியேற்றுள்ளார். அவர் பல ஆண்டுகாலமாக தமிழின அழிப்பிற்கான நீதி, மனிதவுரிமை, மற்றும் கனடிய பூர்வீக குடிமக்களின் உரிமைகளுக்காக கடந்த பல வருடங்களாக கடினமாக உழைத்துவந்தார். பிரதமரின் நேற்றைய அறிவிப்பை கனேடியர்கள் மகிழ்வுடன் வரவேற்றனர். கனடிய பூர்வீக குடிமக்களின் தலைவர்கள் இந்த அறிவிப்பை வரவேற்று கனடிய அரசுடனான நல்லுறவு மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கௌரவ கரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்..
Ottawa Tamil Association – ஒட்டாவா தமிழ் ஒன்றியம்
info@ottawatamilassociation.ca | www.ottawatamilassociation.ca
###