இந்த குறுநூல் (https://tamilconferences.org/booklet) 1948 முதல் தமிழின அழிப்பை கேள்விக்குள்ளாக்காத ஐநாவின் தவறுகள் மற்றும் 2002 இல் உருவாகிய சமாதான முயற்சிகளை பின் தள்ளி 2006 இல் தமிழர் தரப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதில் தொடங்கிய முன்தயாரிப்பு, இன அழிப்பு மற்றும் தொடரும் மறுப்பு போன்ற படிநிலைகளை விவரிக்கிறது. இந்த சட்ட ஆய்வானது சாட்சிகளின் பேட்டிகள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஜனாவுக்கு வெளியே மேற்கொண்ட ஆய்வுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த ஆய்வுகள் ஐ.நா., மனித உரிமைக் குழுக்கள் மற்றும் iNGOக்கள் விட்டுச் சென்ற குறைபாடுகளை நிரப்புவதற்கும், கனடாவில் எற்கனவே இருக்கும் சிறிலங்காவின் தமிழின அழிப்பு எனும் அங்கீகாரத்தை தொடர்ந்து உறுதிப்படுத்தவும் உதவும். இக் குறுநூல் அமெரிக்க பாராளுமன்றத்தின் 2024 இல் முன்மொழியப்பட்ட தீர்மானம், தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரித்து, தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை ஆதரிக்கிறது என்பதையும் விவரிக்கிறது. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சட்ட ஆய்வுகளின் ஒரு பகுதியே இவையாகும். சோழர்களின் அரசுக்கு பின்னர் தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடும் அரசும் தமிழீழத்தில் தான் இருந்தது, அரசற்ற நிலையில் உள்ள தமிழர்களின் மறைக்கப்படும் உண்மைகளை இனம் கண்டு நீதிக்காண வழிகளை காண்பதுதான், எதிர் காலத்தில் உலகில் பரந்திருக்கும் தமிழர்கள் தமிழீழ வரலாறுகளை தற்போதுள்ள தடைகள் இன்றி சுதந்திரமாக பேணவும் இத்தகைய சட்ட ஆய்வுகள் வேண்டியதாக உள்ளது.
ஒட்டாவா தமிழ் ஒன்றியம்
###